ஓரம்போ!!! ஓரம்போ!!! (சன், ஜெயா) டி.வி ந்யூஸ் வருது!!!
நேற்று மாலை சன் டி.வி. செய்தியில் ராமாவரம் தோட்டத்திற்க்குப் பக்கத்தில் உள்ள ஒரு சாக்கடையையும், மாட்டுத்தொழுவத்தையும் காண்பித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு என்று காட்டினார்கள். (அவர் உயிரோடு இருந்த போது அவரை மகா மட்டமான மொழியில் பேசியதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல). இன்று ஜெயா டி.வி. யில் மிக அருமையான தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் காட்டினார்கள். (அது ராமாவரம் தோட்டந்தானுங்களா?) அந்த வீட்டில் வாழ்பவர்கள் என்று நான்கு பேர்களிடம் பேட்டியும் எடுத்தார்கள்..... கருத்து சுதந்திரம் என்பது இதுதானா...இந்த இரண்டு டி.வி களும் சாட்டிலைட்டு மூலமா எசப்பாட்டு பாடுறதுக்கு நம்மதான் கெடச்சோமா? கேப்டனுக்கு ரகசியமா ஒரு ஐடியா... நான் ஆட்சிக்கு வந்தால் இந்த ரெண்டு டி.வி. யையும் மூடிடுவேன்னு தேர்தல் வாக்குறுதி குடுங்க!அடுத்த முதல்வர் நீங்கதான்....
4 Comments:
ந்ன்றி சித்தீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அத்தோட இன்னைக்கி சன் டீவி பார்த்திக்களா??? நம்ம கருன்ஸ, முரசோலி மாறன் அப்படியே குண்டுகட்டா தூக்கி போலிஸ் வான்லே போடற சீன். அதுக்கு பிண்ணணி இசை சேரன் பாட்டு!!
ஒரு வழியாக தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது !!!
எல்லோருக்கும் ஆவல்...யார் ஆட்சிக்கி வருவாங்ன்னு...பாருங்க, மக்கள், 49 ஓ பட்டன் தட்டிட்டு, ஓ போடுவாங்க !!! :)
தங்கள் வருகைக்கு நன்றி மனாமா.
சேரனுக்கும் சன் டிவிக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம், இதுல சேரனோட பாட்டு போட்டு விளம்பரம் போடுராங்க!
11ஆம் தேதி தெரியும் மக்கள் யாருக்கு மாப்பு, யாருக்கு ஆப்புன்னு.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home