சிவகங்கை சீமையும், சின்ன பையனும்!!!!
சிவகங்கை சீமையும், சின்ன பையனும்!!!!
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக விமான பயணத்தின் போது தொலைபேசியிலேயே கட்சியை கலைத்த "சிவகங்கை சின்னபையன்", சீமான் வீட்டு கன்னுக்குட்டி"திரைப்படங்கள் புகழ் (கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்: கலைஞர்) ப.சிதம்பரம் ஆகிய நான் சிவகங்கை வாக்காளர் சமூகத்துக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் :
தொடர்ந்து பல முறை வென்று நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி விருதுகள் பல பெற்று இறுமாப்புடன் "சிவகங்கைக்கு மட்டும் நான் எம்.பி அல்ல, இந்தியாவுக்கே நிதியமைச்சர், இந்தியா என்ற கண்ணாடி மூலம் சிவகங்கையை பார்க்க முடியும், அதுவும் டெல்லியில் இருந்து பார்த்தால் தான் எனக்கு சிவகங்கையே தெரியும்" என்று கூறி, அதன் பலனாக மூன்றமிடத்திற்கு வந்து தோற்று (டெபாசிட் கிடைச்சிடுச்சு!), பின் கடைசித் தேர்தலில் என் மன்னிப்பு நாடகத்தை நம்பி (சிறந்த வசனம்: அம்மா! தாயே!சிவகங்கை என்ற கண்ணாடில இந்தியாவ பார்க்கிறேன்ம்மா!) ஓட்டளித்த உங்களுக்கு என் முதற்கண் நன்றி!!
நானே தொகுதியில் எனது திருக்குமாரன் மூலம் கால் வைத்து சேவை (?) புரிந்து வந்தாலும், ஊரில் இருப்பவர்களை மண்ணில் கால் வைக்க சொல்லி விமர்சிக்கும் நேரத்தில் கூட புன்னகை மாறாமல் பார்த்து கொண்டிருக்கும் உங்கள் பொறுமைக்கு வானமே எல்லை!
ம. பி க்கும், உ.பிக்கும் ஒதுக்கிய நிதி விபரங்களை சொன்னாலே சிவகங்கையில் வாக்குகளை வாரி வழங்கும் வள்ளல்களே! இந்த சட்டசபை தேர்தலுக்கு நுட்பமான பொருளாதாரக் கொள்கைகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டனிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.....
உலக பொருளாதாரம் குறித்து பல கருத்தரங்குகளில் பேச வேண்டி இருப்பதால் அடுத்த தேர்தலில் உங்களை சந்திக்கும் (அதற்கு இடையில் கட்டாயம் உங்களை வந்து சந்திக்க மாட்டேன்) வரை விடை பெறுவது
உங்கள் ப. சிதம்பரம்.... M.P

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home