Friday, May 19, 2006

சட்டசபையில் கேப்டன்...



நன்றி: தினமலர்

அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் காலமானார் :(


அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் காலமானார். அவர் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் அருகே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் மதுரை கொண்டு செல்லப்படுகிறது.

Wednesday, May 17, 2006

கெளம்பிட்டாங்கய்யா!!!


நன்றி: தினமலர்

Tuesday, May 16, 2006

யுத்த பூமியில் ஒரு காதல்!


நன்றி: தினகரன்

Monday, May 15, 2006

"மீசை" கடையில்...

"என்னண்ணே இப்படி ஒரே சிகரெட்ட வட்டமா உட்காந்து மாத்தி மாத்தி ஊதுரானுங்க, இந்த மாதிரி பயலுக தாண்ணே ஒழுங்கா படிக்கிரவங்கள கெடுக்குறது"...

என்னைக் கல்லூரியில் சேர்க்கும் போது துணைக்கு வந்திருந்த நண்பர்கிட்ட புலம்பிக்கிட்டு இருந்த அப்பாவின் குரல், ஒரு பையன் முதலாம் ஆண்டு சேர தன் தந்தையுடன் கல்லூரியை நோக்கி சாலையை கடப்பதை "மீசை" கடையில் நண்பர்களுடன் புகைக்கையில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

Saturday, May 13, 2006

அட!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, May 12, 2006

கேப்டனின் பீலிங்கி!!!!!!






மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேணும்பாங்க... நம்ம கேப்டன் சட்டசபைக்கு போக துணைக்கு வராத மச்சி சதீஷுக்காக வடிவேலு கணக்கா ஒரே பீலிங்கி ஆகிறார்..... ;-)

உண்மை வெற்றி யாருக்கு???

நம்ம சோனியா அன்னைக்குத்தான்!!!.....

நாற்பது சீட்டை வச்சுகிட்டு காலம் பூரா டார்ச்சர் பன்ன கனவு கண்ட தி.மு.கவுக்கு வச்ச வேட்டு....சும்மா கோபாலபுரத்துல ஒக்காந்துக்கிட்டு பி.எஸ்.என்.எல் ஒன் இந்தியா போனப் போட்டு டெல்லிய மிரட்ட முடியாது.... ஏன்னா டெல்லில இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கும் ஒரு ரூபாதான்னு நம்ம சாணக்கியருக்கு நல்லாவே தெரியும்!!!!!

Monday, May 08, 2006

தேர்தல் முடிவுகள் - சும்மா பூந்து கலாய்க்கலாமா????

இதயம் கனிந்த வண்க்கம் ! அடச்சீ...நானும் அந்த் கோயான் கட்சி ஆள் மாதிரி கலாய்கிறேன். மாட்டர்க்கு வர்றேன்.

பசங்களா, மையாலுமா ரொம்ப டென்சனா எதிர் பாத்தினிகிணிதோம் இந்த தேர்தல. எப்பா, ஒரு வழியா வந்துச்சுபா !!! மைக்கு போட்டு குவி குவி, கேவி, கேவி காது டார் டங்வார் கிஞ்சி போச்சுபா.

இப்போ, எவன் சுருட்ட வரப்போரான்னு தெரில. எந்த கட்சி வந்தாலும், அடுத்தவன் ரிவிட் அடிக்க ரெடியா இருப்பான்...

தி.மு.காவா, ஆ.தி.மு.காவா, தே.மு.தி.காவா ?????

நான் இத்த பத்தி கலாய ஜுட் உட்டு ரெடியா இக்கிறேன், நீ வரியா???

Friday, May 05, 2006

சிவகங்கை சீமையும், சின்ன பையனும்!!!!

சிவகங்கை சீமையும், சின்ன பையனும்!!!!
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக விமான பயணத்தின் போது தொலைபேசியிலேயே கட்சியை கலைத்த "சிவகங்கை சின்னபையன்", சீமான் வீட்டு கன்னுக்குட்டி"திரைப்படங்கள் புகழ் (கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்: கலைஞர்) ப.சிதம்பரம் ஆகிய நான் சிவகங்கை வாக்காளர் சமூகத்துக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் :
தொடர்ந்து பல முறை வென்று நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி விருதுகள் பல பெற்று இறுமாப்புடன் "சிவகங்கைக்கு மட்டும் நான் எம்.பி அல்ல, இந்தியாவுக்கே நிதியமைச்சர், இந்தியா என்ற கண்ணாடி மூலம் சிவகங்கையை பார்க்க முடியும், அதுவும் டெல்லியில் இருந்து பார்த்தால் தான் எனக்கு சிவகங்கையே தெரியும்" என்று கூறி, அதன் பலனாக மூன்றமிடத்திற்கு வந்து தோற்று (டெபாசிட் கிடைச்சிடுச்சு!), பின் கடைசித் தேர்தலில் என் மன்னிப்பு நாடகத்தை நம்பி (சிறந்த வசனம்: அம்மா! தாயே!சிவகங்கை என்ற கண்ணாடில இந்தியாவ பார்க்கிறேன்ம்மா!) ஓட்டளித்த உங்களுக்கு என் முதற்கண் நன்றி!!

நானே தொகுதியில் எனது திருக்குமாரன் மூலம் கால் வைத்து சேவை (?) புரிந்து வந்தாலும், ஊரில் இருப்பவர்களை மண்ணில் கால் வைக்க சொல்லி விமர்சிக்கும் நேரத்தில் கூட புன்னகை மாறாமல் பார்த்து கொண்டிருக்கும் உங்கள் பொறுமைக்கு வானமே எல்லை!

ம. பி க்கும், உ.பிக்கும் ஒதுக்கிய நிதி விபரங்களை சொன்னாலே சிவகங்கையில் வாக்குகளை வாரி வழங்கும் வள்ளல்களே! இந்த சட்டசபை தேர்தலுக்கு நுட்பமான பொருளாதாரக் கொள்கைகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டனிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.....

உலக பொருளாதாரம் குறித்து பல கருத்தரங்குகளில் பேச வேண்டி இருப்பதால் அடுத்த தேர்தலில் உங்களை சந்திக்கும் (அதற்கு இடையில் கட்டாயம் உங்களை வந்து சந்திக்க மாட்டேன்) வரை விடை பெறுவது

உங்கள் ப. சிதம்பரம்.... M.P

Tuesday, May 02, 2006

ஓரம்போ!!! ஓரம்போ!!! (சன், ஜெயா) டி.வி ந்யூஸ் வருது!!!

நேற்று மாலை சன் டி.வி. செய்தியில் ராமாவரம் தோட்டத்திற்க்குப் பக்கத்தில் உள்ள ஒரு சாக்கடையையும், மாட்டுத்தொழுவத்தையும் காண்பித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு என்று காட்டினார்கள். (அவர் உயிரோடு இருந்த போது அவரை மகா மட்டமான மொழியில் பேசியதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல). இன்று ஜெயா டி.வி. யில் மிக அருமையான தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் காட்டினார்கள். (அது ராமாவரம் தோட்டந்தானுங்களா?) அந்த வீட்டில் வாழ்பவர்கள் என்று நான்கு பேர்களிடம் பேட்டியும் எடுத்தார்கள்..... கருத்து சுதந்திரம் என்பது இதுதானா...இந்த இரண்டு டி.வி களும் சாட்டிலைட்டு மூலமா எசப்பாட்டு பாடுறதுக்கு நம்மதான் கெடச்சோமா? கேப்டனுக்கு ரகசியமா ஒரு ஐடியா... நான் ஆட்சிக்கு வந்தால் இந்த ரெண்டு டி.வி. யையும் மூடிடுவேன்னு தேர்தல் வாக்குறுதி குடுங்க!அடுத்த முதல்வர் நீங்கதான்....